Saturday, November 27, 2010

நீயும் நானும் (Neeyum Naanum - Mynaa Lyrics)


ஆண்: நீயும் நானும் வானும் மண்ணும்
 நெனைச்சது நடக்கும் புள்ள
 வீசும் காத்தும் கூவும் குயிலும்
 நெனைச்சது கெடைக்கும் புள்ள
பெண்: நடந்தா... அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
 கெடைச்சா... கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்
ஆண்: ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
 ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்கும் புள்ள
 பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..
பெண்: நீயும் நானும்
ஆண்: வானும் மண்ணும்
பெண்: நெனைச்சது நடக்குமய்யா
ஆண்: ஏ... வீசும் காத்தும்
பெண்: கூவும் குயிலும்
ஆண்: நெனைச்சது கெடைக்கும் புள்ள
 (இசை...)
ஆண்: நாம நெனைச்சது நடந்துச்சு நல்லபடி
 அந்த சாமிக்கு என்ன சொல்லுவ
பெண்: நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
 பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
ஆண்: ஹே ஆச கொஞ்சம் வேணும்
 அது ஆயுள் நாளக்கூட்டும்
 அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
 அத நெனைச்சாலே போதும் புள்ள
பெண்: நீயும் நானும்
ஆண்: வானும் மண்ணும்
 நெனைச்சது நடக்கும் புள்ள
பெண்: நீயும் நானும்
 (இசை...)
ஆண்: தெருக்கோடியில் கெடந்த வாழ்க்கையுந்தான்
 இப்ப கோடியில் பொரளுதடா
பெண்: இந்த பூமியக்கூட கையில் சுத்தும்
 அந்த ரகசியம் தெரிஞ்சதடா
ஆண்: ஹே ஹே காதல் தானே மாற்றம்
 நம்மை உயரத் தூக்கி மாட்டும்
 அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும் பூவு
 ஒன்னா கொண்டாடி போவோம் புள்ள
பெண்: நீயும் நானும் வானும் மண்ணும்
 நெனைச்சது நடந்திருச்சு
ஆண்: வீசும் காத்தும் கூவும் குயிலும்
 நெனைச்சது கெடைச்சிருச்சு
 ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
 ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்குமே தடையும் இல்லை
பெண்: ஓ பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..
 நீயும் நானும் வானும் மண்ணும்
 நெனைச்சது நடக்குமய்யா...

மைனா மைனா (Mynaa Mynaa - Mynaa Lyrics)


ஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
 மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
 சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
 நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
 என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
 தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
 எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா
 மைனா மைனா... ஏலே....
 ஏலே.... ஏலே.... ஏலே....
 (இசை...)
ஆண்: சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
 சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
 நீயும் எனக்காக உயிர்
 வாழ்வேன் உனக்காக
 சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
 கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
 அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
 கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா
 மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
 மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
 (இசை...)
ஆண்: கட்டவண்டி செல்லும் வழி தேட
 உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
 நானும் உன்னத் தேடி
 அலைஞ்சேனே மனம் வாடி
 பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
 பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
 தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
 கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர
ஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
 மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
 சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
 நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
 என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
 தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா
 அடையாளம் தெரியவே இல்ல
 புதுசா நீ பொறந்தியா
 மைனா... மைனா..

மைனா - கையப்புடி கண்ணப்பாரு (Kaiya Pudi - Mynaa Lyrics)


ஆண்: 

கையப்புடி கண்ணப்பாரு
 உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ!
 கொஞ்சம் சிரி எட்டு வைய்யி
 தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ!
 மெதுவா பாடு எதையாவது
 பனிப்போல் நீங்கும் சுமையானது
 இனிமேலே....
 மனசோடு உள்ளதப் பேசு என்னிடம் தீரும் பாரம்
 விலகாத அன்புடன் சேர்ந்திருக்கணும் நீயும் நானும் 
பெண்: 
கையப்புடி கண்ணப்பாரு
 உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ!
 கொஞ்சம் சிரி எட்டு வைய்யி
 தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ!
 மெதுவா பாடு எதையாவது
 பனிப்போல் நீங்கும் சுமையானது
 இனிமேலே....
ஆண்: 
ஓ... உன்னையன்றி வேறு சுகம் எனக்கில்லையே
 உள்ளமெங்கும் நீயே வழித்துணை நன்மையே
பெண்: 
உன்ன நெனைக்கையில் பசி எடுக்கல
 நடு நிசியில விழி உறங்கல
ஆண்: 
விடியற வரை ஏதும் புடிக்கல
 விடுகதை இது விடை கிடைக்கல ஏனோ...
பெண்: 
              அடை மழையிலும் குளிரெடுக்கல
              சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல
ஆண்: 
            மனம் மறந்திடும் வழித் தெரியல
            எதுவரை இது வரும் புரியல ஏனோ...
ஆண்: 

கடல சேரும் நதியானது
 உறவ சேரும் உயிரானது
பெண்:
 புவி மேலே.......
 (இசை...)
இருவர்: 

சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
 உன்னைவிட ஏதும் இல்ல ரகசியம்
 தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
 வண்ண நினைவுகள் வந்து உரசுது ஏனோ...
பெண்: 

எதுக்காக இப்படி கூறுகெட்டது மனசு மனசு
ஆண்: 

அநியாயம் பண்ணிட ஆசப்பட்டது வயசு வயசு
ஆண்: 

கையப்புடி...
பெண்: 
கையப்புடி

மைனா - ஏ ஜிங்கி ஜிங்கி (Jingu Chikka - Mynaa Lyrics)


ஆண்: 
ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
 ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
 எங்கே நீயும் கௌம்பிப்போற சொல்லு வேகமா
 நானும் தொணைக்கி வர்றேன் பேசிக்கிட்டே கண்ணே போவோமா
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
பெண்:
 ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
 ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
 எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
 நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்
 எட்டி நகருங்க
ஆண்: 
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஆண்:
 நாடு ரொம்ப கெட்டுப்போச்சி
 நல்லதெல்லாம் செத்துப்போச்சி
 கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா
 நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்
 (இசை...)
ஆண்:
 ராயங்கூரு மூனு மயிலு
 நாங்குனேரி நூறு மயிலு
 சாயங்கால வேளையில சேலை எதுக்கடி
 சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
பெண்: 
சீராலூரு அஞ்சு மயிலு
 சிதம்பரமோ அம்பது மயிலு
 வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன
 அந்த வெட்கக்கேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற
ஆண்:
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஆண்: 
சிங்கிப்பட்டி ஒன்பது மயிலு
 சிங்கப்பூரு எத்தன மயிலு
 அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
 உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
 ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..
 (இசை...)
ஆண்: 
பூதலூரு ஏழு மயிலு
 பூண்டிக்கோயிலு நாலு மயிலு
 காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
 இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா
பெண்: 
கும்பகோணம் ஆறு மயிலு
 குளித்தலையோ நாலு மயிலு
 ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல
 உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல
ஆண்: 
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஆண்: 
மாயவரம் எட்டு மயிலு
 மன்னார்குடி பத்து மயிலு
 எறைக்காத கேணியில நீரு ஏதடி
 என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி
 அடியே........
ஆண்: 
ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

Sunday, November 21, 2010

வேங்கைக்காக சீறும் ஹரி!

Tamil Director Hari threatens debut director Bala for Vengai title

டைட்டிலே மிரட்டலா இருக்கே என்று கூறுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு டைட்டிலுக்காக புதுமுக இயக்குநர் ஒருவரை, பிரபல இயக்குநர் மிரட்டிக் கொண்டிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் ஹரியின் புதிய படத்துக்கு வேங்கை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதையும், இதே பெயரை இன்னொரு இயக்குநரும் தனது படத்துக்கு சூட்டியிருப்பதையும் சில தினங்களுக்கு முன்பே கூறியிருந்தோம். அருவா, சிவகங்கை என்று ஒன்றிரண்டு பெயர்களை யோசித்திருந்த ஹரி, கடைசியாக முடிவு செய்தது வேங்கை என்ற டைட்டிலை! தனுஷ்-தமன்னா இணைந்து நடிக்கும் படத்திற்குத்தான் இப்படி ஒரு பெயரை வைத்திருந்தார் அவர். ஆனால் ஹரியை முந்திக்கொண்டு இந்த டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டார் புதுமுக இயக்குநரான பாலா. அதற்காக முறைப்படி அனுமதியும் பெற்றுவிட்டார். நினைச்சது கிடைக்கலேன்னா, கிடைச்சதை நினைச்சுக்க வேண்டியதுதான்னு போய்விடுகிற மூடில் இல்லை ஹரி. பாலாவுக்கு போன் பண்ணி டைட்டிலை கொடுத்திரு என்கிறாராம். பாலா மறுத்தாலும் ஹரி தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களாம். இந்த நிலையில் இயக்குநர்கள் சங்கத்திற்கு வேறொரு வேலையாக வந்திருந்த ஹரி, மிஷ்கின் விவகாரத்திற்காக அங்கு வந்திருந்த பாலாவை பார்த்ததும் பிடிபிடியென்று பிடித்துக் கொண்டாராம். ஆளு தெரியாம மோதாதே... மரியாதையா டைட்டிலை கொடுத்திரு என்று ஹரி முழங்க, எவ்வளவு மிரட்டினாலும் வேங்கையை தர முடியாது என்று பாலா மறுக்க, மிஷ்கின் பிரச்சினையை தள்ளி வைத்துவிட்டு இவர்கள் மேட்டரை கவனிக்கும்படியானது உதவி இயக்குநர்களுக்கு! இன்னமும் பிரச்சினை முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதால் வேங்கை போலவே சீறிக் கொண்டிருக்கிறார்கள் இரு தரப்பும். 
ஹய்யோ... ஹய்யோ... டைட்டிலுக்கெல்லாம் ஒரு போரா? ஒரே அக்கப்போராவுலயா இருக்கு.....

கூட்டணியை மாற்ற முடிவு செய்த அஞ்சலி!

Anjali hot compares herself with Oviya and Amala

கௌதமன், களஞ்சியத்தோடு நிறுத்திக்கலாம். இனிமேல் நடிச்சா பெரிய ஹீரோக்களுடன்தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அஞ்சலி. 'அங்காடித் தெரு' ரிலீஸ் ஆகிற வரைக்கும், திண்டாடி நின்றவர்தான் அஞ்சலி. அதன்பின் நிலைமை அப்படியே தலைகீழ். பெரிய நடிகர்கள் அழைக்காவிட்டாலும், அவர்களின் லிஸ்ட்டில் அஞ்சலியும் இருந்தார். கதாநாயகிக்கும் நடிப்பை வெளிப்படுத்துகிற அளவுக்கு ஸ்கோப் உள்ள கேரக்டர் என்றால், அப்படத்தின் இயக்குநர்கள் முதலில் கதவைத் தட்ட நினைத்தது அஞ்சலி வீட்டைதான். அந்தளவுக்கு நடிப்பில் நல்ல பெயர் எடுத்த அஞ்சலி, சமீபகாலமாக எடுக்கும் முடிவுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று முணுமுணுக்கிறது சினிமா வட்டாரம். "நேற்று வந்த ஓவியா, அமலா கூட பெரிய நடிகர்களுடன் நடிக்கக் கிளம்பிவிட்டார்கள். நான் மட்டும் ஏன் முகம் தெரியாத புதுமுக நடிகர்களுடன் நடிக்கணும்? அதனால் கொள்கையை மாற்றணும். கூட்டணியை மாற்றணும்" என்று கொதித்துக் கொண்டிருக்கிறாராம் தனது சினிமா கைடுகளிடம். கதைசொல்ல அப்பாயின்ட்மென்ட் கேட்கும் இயக்குநர்களிடம் 'ஹீரோ யாருங்க?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கிறது இப்போது. 'புதுமுகம்ங்க' என்றால் எதிர்முனை 'டொக்...' ஆகிவிடுகிறதாம். ஊர் குருவி பருந்தோட பறக்க ஆச பட்டுச்சாம்... அய்யோ பாவம்!

Movie Name: AADHI Song Title : lelakku lelakku lela

Lelakku lelakku lela,Idhu latest thattuvam thozha
Nee kettukko kaathula coolaa,Adi mela mela
Aey dandakku dandakku danda,uchi vaanathil virisal undaa
Veesum kaathukku varuttham undaa,namma manasil yendaa!
Kavalai yaarukku illa,atha kadanthu pokanum mella,
Rekkaiya virichi sella oru vaanamaa illa!

..Baby baby,oh my baby,
Dont you worry,well make merry!
..Baby baby,oh my baby,
Dont you worry,well make merry!

Lelakku lelakku lela,Idhu latest thattuvam thozha
Nee kettukko kaathula coolaa,Adi mela mela

Vennila onney onnu,Suriyanum onney onnu,
Vazhkayum onney onnu,Vazhnthu paarammaa
Poovendraal vaasam edu,theeyendraal theepam edu,
Ethilumey nanmai undu,Vazhnthu paaramma
Ada kodai oru kaalam,kulir mazhai oru kaalam,
Ithu kaalam tharum gnyanam...
ada inbam oru paadam, varum thunbam oru paadam,
ethai yetrukondu pOnaal manam yeppothum paadum!
Manasaatchi yenbathu aatchi seykayil veezhchi illayamma

....Baby baby...........................
Lelakku lelakku lela,Idhu latest thattuvam thozha
Nee kettukko kaathula coolaa,Adi mela mela

paadivaa raagam varum,odi vaa vegam varum
neendhi vaa karayum varum,ellaam nammodu
aaruthal neeyum solla,maarinen mella mella
aanandha kanneer mattum yendhan kannodu
varum sogam oru megam adhu sollaamaley pogum
Yendrum santhosham thaan vaanam.
varum kaalam neram maarum,puthu thendral vandhu serum,
sila kaayangalum aarum, manam unnOdu aadum
indha veLLai manasum,piLLai vayasum koLLai inbamadi


..Baby baby..

Lelakku lelakku lela,Idhu latest thattuvam thozha
Nee kettukko kaathula coolaa,Adi mela mela
Aey dandakku dandakku danda,uchi vaanathil virisal undaa
Veesum kaathukku varuttham undaa,namma manasil yendaa!
Kavalai yaarukku illa,atha kadanthu pokanum mella,
Rekkaiya virichi sella oru vaanamaa illa!

..Baby baby.....(2)