Wednesday, November 10, 2010
7ஆம் அறிவு
'குருவி', 'ஆதவன்' ஆகிய படங்களைத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் '7ஆம் அறிவு' என்ற படத்தை தயாரிக்கிறார். '7ஆம் அறிவு' படத்தின் ஒரு பகுதி 1500ம் ஆண்டிற்கு முன் நடைபெறுவது போல் உருவாக்கப்படுகிறதாம். '7ஆம் அறிவு' வேறுபட்ட காலங்களில் நிகழும் கதையினை மையமாகக் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்க்கஸ் கலைஞனாக இப்படத்தில் நடிக்கும் சூர்யா, உயிரை பணயம் வைத்து சாகச காட்சிகளைப் புரிந்திருக்கிறார், இதற்காக தாய்லாந்தில் இவர் சிறப்பு பயிற்சியினைப் பெற்றார். இப்படத்தில் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தினை வியந்து போற்றும் ஸ்ருதி, தனது முதல் படமே நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என உறுதியாக கூறி வருகிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். 'தீனா', 'ரமணா', 'கஜினி' என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து வெற்றி பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ், '7ஆம் அறிவு' படத்தை விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்குகிறார். இப்படத்திற்காக கோயம்புத்தூரில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் வளாகத்தை மொத்தமாக வாடகைக்கு எடுத்து இரவும் பகலும் படப்பிடுப்பு கடுமையாக நடந்து வருகிறது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகிவரும் இப்படம் ஆங்கிலத்திலும் டப் செய்யப்படவுள்ளது. ஆங்கிலப் படங்களுக்கு இணையான தொழில்நுட்பத்தை இப்படத்திலும் எதிர்பார்க்கலாம், நிச்சயமாக தமிழ் சினிமாவை இப்படம் பெருமையடையச் செய்யும் என சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் படப்பிடிப்பு நடந்ததையடுத்து சீனாவில் 25 நாட்கள் நடைபெற்றது. படத்தின் முக்கிய காட்சிகள், சீனாவில்தான் படமாக்கப்பட்டுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'கஜினி', ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் 'மெமண்டோ' தழுவல் என்று சொல்லப்பட்டது. '7ஆம் அறிவு' படமும் அவரது இன்செப்ஷன் படத்தின் தழுவல்தானாம். ஆனால் எது எப்படியோ முருகதாஸூம், சூர்யாவும் இணைந்தால் வெற்றி என்பது மட்டும் உறுதி! இணை தயாரிப்பு: எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன்துரை. கலை: பத்மஸ்ரீ தோட்டாதரணி. ஒளிப்பதிவு: ரவி கே.சந்திரன். படத்தொகுப்பு: ஆண்டனி. ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன், அனுவர்தன். பாடல்கள்: நா.முத்துக்குமார், கபிலன். ஸ்டில்ஸ்: வி.விஜய். மக்கள் தொடர்பு: நிகில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment